நெல்லை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
![நெல்லையில் 7 கிலோ வெள்ளி பொருள்கள் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-05-nellai-seizedsilver-scrpr-7205101_04032021224922_0403f_1614878362_237.jpg)
இந்நிலையில், வீரவநல்லூர் பகுதியில் நேற்று (மார்ச்4) பறக்கும் படை அலுவலர் சந்திரன் தலைமையில் கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேரன்மகாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி வந்த காரை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 7.45 கிலோ எடைக் கொண்ட வெள்ளி கொலுசுகள் இருப்பது கண்டறியப்பட்டன. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 7.45 கிலோ எடைக் கொண்ட வெள்ளி கொலுசுகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க : தேர்தல் முன்னெச்சரிக்கை: 100 ரவுடிகள் கைது!