திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் .
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை எதிரில் இருந்த பிரசன்னா ஷாப்பிங் சென்டரில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை, கூலிப் புகையிலை, சைனி கைனி புகையிலை, ஆகியவை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. சுமார் 800 கிராம் உள்ள, அந்த பொருள்களின் மதிப்பு 1500 ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அரசு தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருள்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் குருவைய்யாவுக்கு உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் ரூ. 5000 அபராதம் விதித்தனர்.