திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் பங்களிப்புடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி, இரண்டாவது அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பின்னர், இன்றுடன் பராமரிப்பு பணிகள் முடிந்து பழுது சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 570 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அணுமின் நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இரு தினங்களில் முழு அளவான 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.