திருநெல்வேலி: வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல கட்ட போராட்டம் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று(டிச.26) தொடங்கியது. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
மேலும், திமுக கட்சி நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது ஜனநாயக விரோதப் போக்கு ஆகும். இது அதிமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலில் செய்வது தமிழ்நாட்டில் தற்போது பெருகி வருவகிறது.
அதைத்தடுக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தொடர்ந்து நடிகர்களைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல் அநாகரிகமான வார்த்தைகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர் பெருந்தோழர் நல்லகண்ணு'