ETV Bharat / state

இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை! - Sankarankoil Woman murder

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tirunelveli murder
author img

By

Published : Nov 16, 2019, 12:03 AM IST

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள முல்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா என்ற சந்திரன். இவரின் வீடு தீப்பற்றி எரிந்ததால், அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு வந்து பார்த்த தீயணைப்புத் துறையினர், வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்பு காவல் துறையினர் வீட்டினுள் எரிந்த நிலையிலிருந்த ராஜேஸ்வரி என்பவரது உடலைக் கைப்பற்றினர். அப்போது, ராஜேஸ்வரி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, பின்பு தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் வெறும் நகைக்காக மட்டும் நடந்ததா அல்லது வேறெதும் காரணத்திற்காக நடந்ததா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலியில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் ஆகியோர்களின் உதவியுடனும் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கம்பியால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கம்பியால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா என்ற சந்திரன் இவரது மனைவி ராஜேஸ்வரி(65) தனியாக இருக்கும்போது நகைக்காக தாக்கப்பட்டு பின் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா என்ற சந்திரனின் வீடு தீப்பற்றி எரிந்ததால் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிலிண்டர் வெடித்து இருக்கலாமென தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்து சிலிண்டர் வெடித்ததால் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர், பின்பு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றினர். முதலில் கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு பின்பு தீயிட்டு கொடுத்திருக்கலாம் என சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வெறும் நகைக்காக மட்டும் நடந்துள்ளதா, அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலியில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் , மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களில் உதவியுடனும் இந்த விசாரணை நடந்து வருகின்றது. பிரேதத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.