திருநெல்வேலி: மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் திசையன்விளையை சேர்ந்த செல்வராஜூக்கு சொந்தமாக இயங்கி வரும் கல் குவாரியில் கடந்த 14ஆம் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வம், செல்வகுமார், முருகன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
குறிப்பாக தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மரிய மைக்கேல் என்பவர் மீட்பு பணியில் ஈடுபட்டார் இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இருப்பினும் மீட்புப்பணியில் அதிக அனுபவம் கொண்ட மரிய மைக்கேல் தனது ஓய்வு காலத்திலும் இதுபோன்ற பேரிடர்களில் மீட்பு பணி குறித்து வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். எனவே மரிய மைக்கேல் கல்குவாரி விபத்து மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்/ அவர் ஆரம்பம் முதல் கடைசி வரை அங்கேயே இருந்து மீட்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். எனவே அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் பரிசுகளும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாநகர மதிமுக கட்சியின் செயலாளர் நிஜாம் மீட்பு பணியில் ஈடுபட்ட மரிய மைக்கேலை நேரில் அழைத்து பாராட்டினர். மேலும் மரிய மைக்கேலுக்கு 1 1/4 சவரன் தங்கச் செயின் பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க: பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 2,023 பேர் மீது வழக்கு