ETV Bharat / state

நெல்லையப்பர் கோயில் ரூ.4 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு - ரூபாய் 4 கோடியே 14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நெல்லையப்பர் கோவில் புனரமைக்கப்படும்

நெல்லையப்பர் கோயிலில் ரூ.4 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Jul 5, 2022, 5:54 PM IST

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூலை 5) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் திருவிழா சமயங்களில் அன்னதான விரிவாக்க திட்டத்தின் கீழ், 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கோயிலில் காந்திமதி யானைக்கு அமைத்துள்ள நீச்சல் குளத்தைப் பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, '100 ஆண்டுகளுக்கு மேலாக நெல்லையப்பருக்கு மூலிகை தைலம் சாத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் நெல்லையப்பருக்கு மூலிகை தைலம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.4 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நெல்லையப்பர் கோயிலில் தொடங்கப்பட உள்ளன.

நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நெல்லையப்பர் கோயிலில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ரூ.21 லட்சம் கூடுதல் தொகை செலவில் திருவிழா காலங்களில் 60,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர் உலா வருகின்ற பகுதிகளில் முழுமையாக மின்வாரிய துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு அடியில் மின்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும். நெல்லையப்பர் கோயிலில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை ஆணையாளர் அந்தஸ்தில் அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களுக்கு கழிப்பறை குடிநீர் போன்ற அடிப்படை பணிகளை தனியார் நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கைகள் வந்தவுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கிய கோயில்களில் முதல் கட்டமாக பணிகள் தொடங்கப்படும். 1,500 கோயில்கள் ரூ.1,000 கோடி செலவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதில், முதல் கட்டமாக 100 கோயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 3 கோயில்களுக்கு தங்கத்தேரும் 2 கோயிலுக்கு வெள்ளி தேரும் புதியதாக செய்யப்பட உள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உடன்குடியில் மணல் கொள்ளை; தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.