ETV Bharat / state

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இடையூறாக இருந்த மண் குவியல் அகற்றம்!

author img

By

Published : Nov 29, 2022, 1:07 PM IST

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த நூற்றுக்கணக்கான டன் மணல் அகற்றப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இடையூறாக இருந்த மண் குவியல் அகற்றம்!
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இடையூறாக இருந்த மண் குவியல் அகற்றம்!

திருநெல்வேலி மாநகரின் பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், கடந்த 2018ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பேருந்து நிலையமாக 78 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 80% பணிகள் முடிவுற்ற நிலையில், பேருந்து நிலைய கட்டுமான பணியில் அஸ்திவாரம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மண்ணை விற்பனை செய்வதில், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த நூற்றுக்கணக்கான டன் மணல் அகற்றப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி உத்தரவிட்டது. எனவே தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் புவியியல் வல்லுநரும் வழக்கறிஞருமான கே.கலைவாணன் ஆணையாளராக நியமிக்கப்பட்டு, அவர் மூலம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் டன் கணக்கில் மணல், மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. இதனால் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் இறுதி நிலையில் தொடர முடியாமலும், அதனால் பேருந்து நிலையம் திறக்க முடியாத நிலையிலும் உள்ளது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில், பேருந்து நிலையத்தில் உள்ள மணல் குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், வழக்கறிஞர் வேலுச்சாமியை ஆணையாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து வேலுச்சாமி ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின், மண் குவியலை வேறு இடத்திற்கு மாற்ற கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று (நவ 29) அதிகாலை முதல் மண்ணை மாற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. அள்ளப்படும் மண், ராமையன்பட்டி குப்பை கிடங்கு அருகில் வைக்கப்பட உள்ளது. இதற்காக மண் எடுக்கும் பேருந்து நிலைய கட்டுமானப்பகுதி மற்றும் மண்ணை சேமித்து வைக்கும் ராமையன்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 180 வயதாகும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் மின்னொளியில் ஜொலிக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.