திருநெல்வேலி: சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், வியாபார நிறுவனங்களின் எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, டவுன், தச்சநல்லூர் ஆகிய இடங்களில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு சாலை ஆக்கிரமிப்பு முக்கிய காரணம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் உத்தரவின் பேரில் இன்று (ஆக.10) விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ரெய்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது - அமைச்சர் கீதா ஜீவன்