ETV Bharat / state

’இரட்டை ரயில் பாதை பணிகள் அடுத்தாண்டுக்குள் நிறைவு’ - இரட்டை ரயில் பாதை பணிகள்

திருநெல்வேலி: மதுரை - திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணிகள் 2021 டிசம்பருக்குள் முடிவடையும் என தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

Railway
Railway
author img

By

Published : Nov 12, 2020, 3:01 PM IST

தமிழ்நாட்டில் தற்போது சென்னையிலிருந்து மதுரைவரை இரட்டை ரயில் பாதை போடப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தென் தமிழ்நாட்டின் முக்கிய ரயில் வழித்தடமான திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வரையில் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்படி மதுரை - நாகர்கோவில்வரை ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி 2015ஆம் ஆண்டு தொடங்கியது. அதேபோல் 900 கோடி ரூபாய் மதிப்பில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம்வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஐந்து ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. தற்போது வரை மதுரையிலிருந்து திருநெல்வேலி கங்கைகொண்டான்வரை இரட்டை ரயில் பாதைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடம்பூர் - கங்கைகொண்டான்வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்த நிலையில் கடலூர் - கங்கைகொண்டான் இரட்டை ரயில் பாதையில் ரயிலின் வேகத்தை 60 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டராக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேக்குமார் ராய், முதன்மை திட்ட மேலாளர் கமலாஹர் ரெட்டி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் ஆகியோர் இன்று (நவம்பர் 12) ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு பணிக்காக இயக்கப்பட்ட தனி ரயிலில் அலுவலர்கள் பயணம் செய்து புதிதாக போடப்பட்ட இரட்டை ரயில் பாதையில் ரயில் வேகத்தை கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடம்பூர் - கங்கைகொண்டான்வரை இரட்டை ரயில் பாதைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரயிலின் வேகத்தை 60 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டராக மாற்ற இன்று ஆய்வு செய்துள்ளோம். அடுத்த பத்து தினங்களுக்குள் வேகம் 100 கிலோ மீட்டராக கூட்டப்படும். திருச்செந்தூர் மின் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மதுரை - திருநெல்வேலிவரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் 2021 டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.