ETV Bharat / state

தமிழ்நாடு முழுக்க ராகுல் காந்தி பரப்புரை செய்ய திட்டம்: திருநாவுக்கரசர் எம்பி - தமிழ்நாடு அரசியல் தொடர்பான செய்திகள்

திருநெல்வேலி: தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரப்புரை செய்யும் வகையில் ராகுல் காந்தியின் பரப்புரை பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்துள்ளார்.

mp thirunavukkarasar
திருநாவுக்கரசர் எம்பி
author img

By

Published : Jan 18, 2021, 10:03 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவருமான திருநாவுக்கரசர் நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ’தேர்தலுக்கு முன்னர் 5 முறையாவது ராகுல் காந்தி சுற்றுபயணம் அமையவேண்டும் என பிரச்சார் குழு தலைவர் என்ற அடிப்படையில் என் தலைமையில் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக வரும் 23ஆம் தேதி ராகுல் காந்தி கோயம்புத்தூர் வருகிறார். தொடர்ந்து பல இடங்களில் பரப்புரை செய்கிறார்

கோயம்புத்தூரில் விவசாயிகள்,தொழிலாளர்கள்,வர்த்தக துறை சார்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு என பல நிகழ்வுகள் நடக்கிறது. இது குறித்த விபரம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஆகியோர் முன்னிலையில் 21ஆம் தேதி கோவையில் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்ட பயணம் நிறைவில், ராகுல் காந்தி கலந்துகொள்ளும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும்பாலான விவசாயிகளின் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடை செய்யமுடியாமல் போனது. நெற்கதிர்கள் அழுகிய நிலையில் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் நேரடியாக கணக்கீடு செய்து மாநில அரசு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான உதவியை செய்யவேண்டும். மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கான எந்த திட்டமும் செய்யவில்லை. ஒரு லட்சம் டிராக்டர்கள் டெல்லியை சுற்றிவருகின்றன.மோடி இதுவரை விவசாயிகளை நேரில் சென்று சந்திக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, விவசாயிகளுக்கு எதிரானது என்றார்.

ராகுல்காந்தி பாரம்பரியம் தெரியாதவர் என எழும்பிய விமர்சனம் குறித்து பேசிய எம்பி திருநாவுக்கரசர், ’ஜல்லிகட்டு, பொங்கல் விழாவை பார்க்க வேண்டும் என ராகுல்காந்தி ஆசைப்பட்டார். ஆகவே அவனியாபுரத்தில் நடந்த விழாவில் வந்து கலந்துகொண்டார். ராகுல் காந்தி தமிழ் பாரம்பரியம் தெரியாதவர் என சொல்வது தவறு.

பாஜக குறித்து, தமிழ்நாடு முழுதும் பாஜக வளர்ந்திருப்பதாக கருதினால் 60 தொகுதிகளில் மட்டும் நிற்காமல் 234 தொகுதியிலும் நின்று போட்டியிடவேண்டும். பாஜக அதிமுகவை மிரட்டுகிறது. பாஜக முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் என அதிமுகவிடம் சர்வாதிகாரம் செய்கிறது. சசிகலா எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியாது. அதிமுகவில் முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ சசிகலாவை சேர்த்துக்கொள்வார்களா என்றே தெரியாது. தமிழ்நாடு அரசின் செயல்பாடினை முன்வைத்து காங்கிரஸ் கமிட்டியின் பரப்புரை இருக்கும் என்றார்.

திருநாவுக்கரசர் எம்பி

வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு, எந்த மாநிலத்திலும் வாரிசுகள் இல்லாத அரசியல் நடக்கவில்லை. வாரிசு என்பதனால் அரசியலுக்கு வரக்கூடாது என்ற சட்டமில்லை. டாக்டர் மகன் டாக்டராக வருவதை போன்று அரசியல் வாதியின் பிள்ளைகள் அரசியலுக்கு வரலாம்.எங்கள் கூட்டணி தான் முதல் கூட்டணி; ஆளும் அதிமுக கூட்டணி இரண்டாவது அணி; மூன்றாவது அணிகள் இருப்பதாக தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் அமைத்த கூட்டணி தான் வெற்றி கூட்டணி எனப் பதிலளித்தார் எம்பி திருநாவுக்கரசர்.

கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்கவேண்டும். அதை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கூடுதல் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனை வலியுறுத்திய ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.