ETV Bharat / state

கரோனா: உழைப்பவர்களுக்கு பொதுமக்கள் நன்றி! - தமிழகத்தில் கரோனா பாதிப்பு

நாகை: நாகை, புதுக்கேட்டை மாவட்டங்களில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க உழைப்பவர்களுக்கு கைகளைத் தட்டி ஒலி எழுப்பி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Corona update in TN
Public showers thanks to persons who involves in preventing corona
author img

By

Published : Mar 23, 2020, 8:14 AM IST

மயிலாடுதுறையில் மக்கள் ஊரடங்குக்கு இடையே மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வந்து மருத்துவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்து கைகளைத் தட்டினர்.

தேமுதிக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்ட தேமுதிகவினர் கைகளைத் தட்டி நன்றி தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதன் காரணமாக வணிக நிறுவனங்கள், தேநீர் கடை உள்ளிட்ட சிறு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பேருந்துகள் இயங்காத நிலையில், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

ஊரடங்குக்கிடையே மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வந்து கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், பத்திரிகைத் துறையினருக்கு கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்.

Public showers thanks to persons who involves in preventing corona

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாடிகளில் நின்றவாறே கைகளைத் தட்டினர். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் காவல் துறையினர் கைகளைத் தட்டி மருத்துவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்தனர்.

மயிலாடுதுறையில் தங்கியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிகவினர் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

புதுக்கோட்டையில் காலை 7 மணியிலிருந்து 5 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியே வராமலும், மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தனர்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கும் நன்றி சொல்லும்விதமாக திலகர் திடல், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளியே வந்து ஆண்கள், பெண்கள் எனக் கைத்தட்டினர்.

நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உத்தரவின் பெயரில் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்கள் நகராட்சி வாகனத்தில் மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மணி ஓசை அடித்து சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

திருநெல்வேலி மாநகரில் காலை முதல் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் ஊரடங்கு உத்தரவைப் பொதுமக்கள் பின்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து நெல்லை மகாராஜநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மாலை 5 மணி அளவில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்பதற்காக அயராது உழைத்துவரும் மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத் துறையினருக்கு கைதட்டி தங்களது நன்றியைத் தெரிவித்தனர். அத்துடன் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து கரோனாவை வெல்வோம் எனவும் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.