ETV Bharat / state

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - அமைச்சர் பி.டி.ஆர். கூறுவது என்ன?

PTR Palanivel Thiagarajan: நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும்போது இருந்த கடுமனையான நிதி நெருக்கடி தான் தற்போதும் நீடித்து வருகிறது. தமிழக அரசுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஆதாரம் தற்போதைய நிலையில் போதாது என்று தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

PTR Palanivel Thiagarajan
நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு.. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 2:34 PM IST

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு.. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது என்ன?

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "கல்வி ஒரு மனிதனின் தரத்தை உயர்த்தும் வாழ்க்கை முறையைச் சிறப்பிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும். ஒரு சிறந்த கல்லூரி சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்குப் பணி செய்யும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தான் கல்வி சதவீதம் கல்லூரிகளுக்கு இணையாக உள்ளது.

ஆனால் தென் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அதன் அடிப்படையில் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் அதேபோல் பல முயற்சிகள் சட்டமன்றத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும்போது இருந்த கடுமனையான நிதி நெருக்கடி தான் தற்போதும் நீடித்து வருகிறது.

தமிழக அரசுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஆதாரம் தற்போதைய நிலையில் போதாது. ஆனால் உலக அளவில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் ஐடி வேலை வாய்ப்புகள் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் மிகுந்த வேகத்தில் உருவாகி வருகிறது.

தமிழகத்தில் மாதத்திற்குப் பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் ஐடி துறையில் உருவாகி வருகிறது. அரசு முயற்சி எடுத்து இதனை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்துவதற்குத் திட்டமிட்டு உள்ளது. அதற்குத் தொழில்நுட்ப பூங்காக்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சரியான நிறுவனங்களை உலக அளவில் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து ஊக்கமளித்து அவர்களுடைய பிரச்சனைகளையும் தடைகளையும் நீக்கி வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் வந்து கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அரசு அந்த நடவடிக்கை மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனைச் சிறப்பிக்க வழி வகை செய்து வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்டில் உயிரிழந்த மாணவர் மதன்குமார் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் ரூ.3.லட்சம் நிதியுதவி..உரிய விசாரணை செய்ய ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.