ETV Bharat / state

திமுக அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதனப் போராட்டம்! - Hindu desiya katchi protest

திமுக அரசைக் கண்டித்து இந்து தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest that Halwa offers to the public
பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டம்
author img

By

Published : Jan 24, 2022, 9:25 PM IST

திருநெல்வேலி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றுவதாகக் கூறி இந்து தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நகை கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து பொதுமக்களை ஏமாற்றி வருகிறது என இந்து தேசிய கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், திமுக அரசை கண்டிக்கும் வகையில் இந்த தேசிய கட்சியினர் இன்று (ஜன.24) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதனப் போராட்டம்

இதையொட்டி அக்கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.எஸ். மணி தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் கையில் அல்வாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு அல்வாவை வழங்கி திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக கோஷம் எழுப்பினர். இந்த நூதன அல்வா வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.