ETV Bharat / state

நெல்லையில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தொடக்கம்

திருநெல்வேலி: முதியோர், மாற்றுதிறனாளிகளிடம் வீடுகளுக்கேச் சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியது.

தபால் வாக்குகள்  தபால் வாக்குப்பதிவு  நெல்லையில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தொடக்கம்  திருநெல்வேலியில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்  Postal voting begins in Thirunelveli  Commencement of postal voting in Nellai  Postal voting  Postal votes
Postal voting begins in Thirunelveli
author img

By

Published : Mar 30, 2021, 1:09 PM IST

தமிழ்நாட்டில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு வசதியாக அவர்களின் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்கு அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோயாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (மார்ச்.30) தொடங்கியது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 109 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் மாவட்டம் முழுவதும் மூன்றாயிரத்து 403 பேர் தபால் வாக்களிக்க தகுதியானவராகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று (மார்ச்.30) நடமாடும் குழுவினர் ஏற்கனவே கண்டறியப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கேச் சென்று தபால் வாக்கு படிவத்தினை வழங்கினர்.

பின்னர் குடும்பத்தினர் உறவினர்கள் உள்பட யாருமில்லாத தனி அறையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கூட்டிச் சென்று தபால் வாக்கினைப் பதிவு செய்ய அலுவலர்கள் நேரம் வழங்கினர். படிவத்தினை பூர்த்தி செய்த பிறகு குழு அலுவலர்கள் அதை வாங்கி வாக்காளர் முன்னிலையே மூடி கவரிட்டு அவற்றை வாக்குப் பெட்டிக்குள் போட்டனர்.

தொடங்கியது தபால் வாக்குகள் பெறும் பணிகள்

தொடர்ந்து நாளை, நாளை மறுதினமும் தபால் வாக்குப்பதிவு பெறப்பட உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மிகவும் சிரமத்துடன் வாகனங்களில் அமரவைத்தும் தோளில் சுமந்தபடியும் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள்.

ஆனால், இந்த முறை அவர்களின் நலனுக்காக மிகவும் எளிய முறையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குப்பதிவு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள், தன்னார்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 100 விழுக்காடு தபால் வாக்குகளை உறுதி செய்ய ஜாக்டோ ஜியோ கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.