நெல்லை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆறாவது பெரிய மாநகராட்சியான நெல்லை மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றிரவு (ஜன.25) முதல் அமலுக்கு வந்தன.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் போஸ்டர்கள் பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் இருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என 100 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
இதையும் படிங்க:கூட்டம் கூட்டி வாக்கு சேகரிக்கத் தடை: மாநிலத் தேர்தல் ஆணையர்