திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த அன்பு, சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு, செந்தாமரைக் கண்ணன் என்பவர் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து செந்தாமரைக் கண்ணன் இன்று (ஜூன் 04) நெல்லை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெல்லை மாநகரில் பொதுமக்கள், வணிகர்கள் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை கடைகள், வீடுகளுக்கு முன் பொருத்த வேண்டும்.
அப்போது, குற்றங்களை கண்டறிவதற்கும் குற்றங்கள் குறைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், "முறையான ஆவணங்களின்றி பொதுமக்களுக்கு கடன் கொடுக்கும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.