ETV Bharat / state

'எங்களை என்கவுன்ட்டர் செய்தாலும் அசர மாட்டோம்' - யூடியூப் பார்த்து Bomb தயாரித்த 3 பேர் கைது!

யூடியூப் வீடியோ பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து, அதனை சுவரை நோக்கி வீசி வீடியோ வெளியிட்ட ஒரு சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 9, 2023, 6:09 PM IST

'எங்களை என்கவுன்ட்டர் செய்தாலும் அசர மாட்டோம்' - யூடியூப் பார்த்து Bomb தயாரித்த 3 பேர் கைது!

நெல்லை: வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவர் ஒருவன் பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கத்தில் கடந்த மாதம் பெட்ரோல் வெடிகுண்டு வீசுவது போன்ற வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் மிக தாமதமாக வள்ளியூர் காவல்துறைக்கு தெரிய வந்தது.

இதையடுத்து வள்ளியூர் காவல்துறை அதிரடி விசாரணையில் இறங்கினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இந்த வீடியோ விவரத்தை விரைவில் விசாரிக்கும் படி உத்தரவிட்டார். அதன் பெயரில் நடந்த விசாரணையில் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், அவரது நண்பர்கள் இசக்கியப்பன்(21), சரவணன்(20) ஆகியோருடன் சேர்ந்து யூடியூப் வலைதளத்தை பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்ததாக கூறப்பட்டது.

மேலும் தாங்கள் தயார் செய்த பெட்ரோல் வெடி குண்டுகளை அப்பகுதியில் உள்ள சுவரை நோக்கி வீசிவிட்டு பின்னணியில் ’தேவர் மகன்’ படத்தில் வரும் பாடலை ஒலிக்க விட்டுள்ளனர். அந்த வீடியோ பின்னணியில் ’செத்தாலும் வாழ்ந்தாலும் மறவனாக வாழ வேண்டும்’ மேலும் ’எங்களை என்கவுன்ட்டர் செய்தாலும் நாங்கள் அசர மாட்டோம்’ என்று வீர வசனம் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சரவணன், இசக்கியப்பன் மற்றும் ஒரு சிறுவன் உள்பட மூன்று பேரை சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது சினிமா படங்களில் வரும் காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது எனவும், அது போன்று தாங்களும் பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்ய வேண்டும் என்ற ஆசையால் தயார் செய்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் கேரள மாநிலத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வள்ளியூர் காவல்துறையிடம் விசாரித்த போது, ''சிறுவர்கள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுவதற்காக இதுபோன்று வெடிகுண்டு தயாரித்துள்ளனர். இதில் வேறு எந்த சதித் திட்டமும் இல்லை. மற்றொரு சிறுவன் கேரளாவில் உள்ளார். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார்'' என்றனர்.

யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாக பார்க்கப்பட்டாலும், அதில் தீமைகள் அதிகளவு உள்ளது என்பதை இது போன்ற சம்பவங்கள் நிரூபிக்கிறது. எனவே காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கவனித்து, இது போன்ற அச்சுறுத்தலான பதிவுகளை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: Holiday Special Trains: தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.