திருநெல்வேலி மாவட்டத்தில் ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது;
"2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பினால் முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்துத் தொழில் துறைகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 2021ஆம் ஆண்டும் மீண்டும் இரண்டாவது அலை என்ற பெயரில் மக்களையும், கூலித்தொழிலாளிகளையும், அன்றாட தொழில் வர்த்தகங்களையும் பாதிக்கும் கரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றோம்.
இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, மற்ற தளர்வுகளைப் போலவே எங்களுக்கும் கோயில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை 50 சதவிகிதம் தளர்வுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும்" என்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்துவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: 'இரவு ஊரடங்கு எதிரொலி: பகலில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்'