ETV Bharat / state

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தமிழறிஞர்களின் அருமை தெரியவில்லை... நெல்லையில் சீமான் பேட்டி

author img

By

Published : Aug 22, 2022, 3:45 PM IST

'நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கச்சென்ற சீமான், தமிழ்த்தாய் தன் செல்ல மகனை, தன் அன்பு மகனை இழந்து விட்டாள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழறிஞர்களின் அருமை தெரிவதில்லை' எனக் கூறினார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தமிழறிஞர்களின் அருமை தெரியவில்லை...நெல்லையில் சீமான் பேட்டி

திருநெல்வேலி: பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மகன்கள் மற்றும் உறவினர்களை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,”முழுக்க முழுக்க தமிழ் இனம் சார்ந்து நின்றவர், நெல்லை கண்ணன். தமிழ்த்தாய் தன் செல்ல மகனை, தன் அன்பு மகனை இழந்துவிட்டாள் என்பது தான் உண்மை. இந்த தலைமுறை தமிழ் எழுதப்படிக்கத்தெரியாமல் வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற தமிழ் ஆளுமைகள் இனி வர முடியுமா” என்றார்.

மேலும்,”தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, வைகோ போன்ற சில ஆளுமைகள் தான் தற்போது இருக்கின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் அள்ளிப் பருகுபவர்களாக இல்லை. அதனால் தமிழ் அறிஞர்களின் அருமை அவர்களுக்குத்தெரிவதில்லை” என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: நெல்லை கண்ணனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.