ETV Bharat / state

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி முன்னாள் திமுக அமைச்சர் மனு!

நெல்லை: சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக பிரிக்கக்கோரி முன்னாள் திமுக அமைச்சர் தங்கவேலு தலைமையிலான கோரிக்கை இயக்கம் வர்த்தக குழுவினர், வர்த்தக நிறுவனர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர்.

திமுக
author img

By

Published : Sep 18, 2019, 7:17 PM IST

நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மாவட்டத்திற்கான எல்லைகள் பிரிப்பது, அரசு தலைமை இடங்கள் எங்கு அமைப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

அதேபோல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்திலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு திருவேங்கடம் , கரிவலம்வந்தநல்லூர், சிவகிரி, தேவர்குளம், வன்னிகோனந்தல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மாவட்டம் பிரிக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று சங்கரன்கோவிலில் பொது வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தப்பட்டு பேரணியாக சென்று வட்டாட்சியரிடமும் பொதுமக்கள் மனு அளித்தனர் .

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி முன்னாள் திமுக அமைச்சர் மனு

இந்நிலையில் இன்று சங்கரன்கோவில் மாவட்டத்தின் கோரிக்கை இயக்கம் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு பேசுகையில், ”வேலூர் எப்படி மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் சங்கரன்கோவிலையும் பிரிக்க வேண்டும். தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான அனைத்து வசதிகளும் சங்கரன்கோவிலில் உள்ளது. தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களிடம் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிப்போம்” என்றார்.

Intro:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக பிரிக்க கோரி சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் , வர்த்தக நிறுவனர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர் .Body:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக பிரிக்க கோரி சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் , வர்த்தக நிறுவனர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர் .
         
நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, மாவட்டத்திற்கான எல்லைகள் பிரிப்பது, அரசு தலைமை இடங்கள் எங்கு அமைப்பது என்பது உள்ளிட்ட பணிகள் தனி அதிகாரி நியமித்து நடந்து வருகிறது. தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடம் கோரிக்கை எழுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்திலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு திருவேங்கடம் , கரிவலம்வந்தநல்லூர் , சிவகிரி , தேவர்குளம் , வன்னிகோனந்தல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மாவட்டம் பிரிக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று சங்கரன்கோவிலில் பொது வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள் , விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டன. பேரணியாக சென்று பொதுமக்கள் வட்டாட்சியரிடமும் மனு அளித்தனர் . இந்நிலையில் இன்று சங்கரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்கம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷை சந்தித்து சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர் .
         இதுகுறித்து அவர்கள் கூறுகையில் வேலூர் எப்படி 3 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதோ அதன்படி சங்கரன்கோவிலையும் பிரிக்க வேண்டும் , மாவட்டத்திற்கான அனைத்து வசதிகளும் சங்கரன்கோவிலில் உள்ளது. தற்போது ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் , அடுத்து சென்னையில் சென்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் , அமைச்சர் பெருமக்கள் , உயர் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளிப்பதாக தெரிவித்தனர்.
பேட்டி தங்கவேலு (திமுக முன்னாள் அமைச்சர் )Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.