ETV Bharat / state

நெல்லையில் சாலை விதிகளை மீறியதாக ரூ.2 கோடி வரை அபராதம் விதிப்பு - காவல் ஆணையர் - திருநெல்வேலி செய்திகள்

திருநெல்வேலி மாநகரில் சாலை விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 1, 2023, 7:54 PM IST

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கல்

திருநெல்வேலி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் நீர்மோர் மற்றும் வெற்றி வேரினால் செய்யப்பட்ட தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவல் துறையினருக்கு நீர்மோர், தொப்பி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநகரில் சிசிடிவி கேமராக்கள் உதவியோடு இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகிறோம். நேற்று இருவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் 22 வாகனங்களை திருடியது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலை விதிகளை பின்பற்றாத 1600 நபர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் சிறுவனை தூக்கிச்சென்ற மிக்சர் கம்பெனி ஓனர்.. கடனை முழுமையாக அடைத்த பிறகும் அராஜகம்..

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.