ETV Bharat / state

காதல் திருமணத்தால் ஆத்திரம்.. வீடு புகுந்து மகளை தூக்கிய பெற்றோர் கைது! - what is Civic news

நெல்லையில் மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் வீடு புகுந்து மகளை காரில் கடத்திச் சென்ற சம்பவத்தில் கேரளாவில் தலைமறைவாக இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார் கல்லூரி மாணவியை பத்திரமாக மீட்டனர்.

நெல்லையில் மகளை கடத்திய பெற்றோர் கைது.. காதல் திருமணத்தால் ஆத்திரம்!

author img

By

Published : Feb 20, 2023, 8:40 AM IST

நெல்லையில் காதல் கணவனிடம் இருந்து மகளை பிரித்து கடத்திச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ

திருநெல்வேலி: கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரெங்கநாராயணபுரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கராஜா - சுகந்தி தம்பதி. இவர்களது மகன் முருகன் (24). டிப்ளமோ பட்டதாரியான இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் முருகேசன் - பத்மா தம்பதி வசித்து வருகின்றனர்.

இவர்களது மகளான சுமிகா (19), தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். முருகனும், சுமிகாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர, அதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே கடந்த ஜனவரி 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சுமிகா, காதலர் முருகனுடன் சென்னை சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே சுமிகாவின் தந்தை முருகேசன், தனது மகளை காணவில்லை என கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவர் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து முருகன் - சுமிகா இருவரையும் மீட்ட காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போது தான் முருகனுடன் செல்வதாக சுமிகா கூறி உள்ளார். பின்னர் இருவரும் கூடங்குளத்தில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீ ரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு தனது மகள் வந்ததை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு சென்று சுமிகாவை தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அதனை தடுக்க வந்த முருகன் மற்றும் அவரது பெற்றோரையும் தாக்கி அவதூறாக பேசியவிட்டு, சுமிகாவை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இது தொடர்பாக முருகன், கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சுமிகாவின் உறவினர்களான ஸ்ரீரெங்கநாராயணபுரத்தைச் சேர்ந்த அமுதா, அனுசுயா, பாப்பா, தங்கம்மாள், செல்வக்குமார், விஜயகுமார், வைகுண்டமணி மற்றும் சுமிகாவின் சகோதரர் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அதேநேரம் சுமிகா மற்றும் அவரது பெற்றோர் குறித்த தகவல் கிடைக்காததால் போலீசார் தொடர் சோதனை வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்களைப் பிடிக்க கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் தலைமறைவானவர்களிடம் செல்போன் இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாக இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சுமிகாவின் தந்தை முருகேசனுக்கு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பதும், அங்குதான் முருகேசன் தனது மகளுடன் பதுங்கி இருப்பதும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக கேரளாவுக்கு விரைந்த தனிப்படையினர், பெற்றோர் மற்றும் சித்தி அனுஷியா ஆகியோரின் கட்டுப்பாட்டில் சுமிகா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து சுமிகாவை மீட்ட காவல் துறையினர், அவரது பெற்றோர் உள்பட 3 பேரையும் கூடங்குளத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களை ராதாபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது சுமிகா, தான் தனது கணவருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். எனவே, காவல் துறையினர் சுமிகாவை கணவர் முருகன் உடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைதான பெற்றோர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்: அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.