ETV Bharat / state

29 அடியில் குளமாக மாறிய பாபநாசம் அணை… விவசாயிகள் வேதனை

பாபநாசம் அணையில் 29 அடி மட்டுமே நீர்மட்டம் உள்ளதால், இந்த வருடம் கார் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 2, 2023, 10:34 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பிய மாவட்டமாகவே உள்ளது. இங்கு பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற பிரதான அணைகள் உள்பட மொத்தம் ஆறு அணைகள் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பெய்யும். எனவே, அந்த நேரங்களில் இந்த அணைகள் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.

குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடியில் இரண்டு கட்டங்களாக விவசாயிகள் ஆண்டுதோறும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக அணைகளில் நீர் இருப்பு அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. 143 அடி உயரமும், 5 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட பாபநாசம் அணையில் 29 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

அதாவது, ஒரு டிஎம்சிக்கு குறைவான தண்ணீரே அணையில் உள்ளது. கடல் போல காட்சி அளிக்கும் பாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தற்போது குளம் போன்று காட்சி அளிக்கிறது. மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறில் 63 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. எனினும், 1.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே அந்த அணையில் உள்ளது.

விவசாய தேவை மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்ட குடிநீர் தேவையையும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்தான் பூர்த்தி செய்து வருகிறது. எனவே, அந்த அணையில் இருந்தே தற்போது தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில், பாபநாசம் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கார் சாகுபடிக்காக ஜூன் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும். பாபநாசம் அணை மூலம் மறைமுகமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் அணை நேற்று திறக்கப்படவில்லை. அடுத்த 10 முதல் 15 நாட்களில் திறக்கவும் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடையும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்யும். அந்த மழைப் பொழிவை பொறுத்தே குற்றால சீசன் தொடங்கும்.

அந்த நேரத்தில் நெல்லை மாவட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும். குறைந்த பட்சம் பாபநாசம் அணையில் 60 அடிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்ந்தால் மட்டுமே கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை தென்மேற்கு பருவ மழை தொடங்காத நிலையில், இந்த ஆண்டு கார் சாகுபடி கை கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

இதையும் படிங்க: mekedatu dam issue: மேகதாது அணைக்கு ரூ.1000 கோடி கர்நாடக அமைச்சர் டிகே.சிவக்குமார்.. ஆட்சிக்கு வந்தவுடன் வேலையை காட்டுவதா? என துரைமுருகன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.