தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மருந்தகங்கள் மட்டுமே குறிப்பிட்ட கால அளவு நிர்ணயத்துடன் இயங்கிவருகின்றன. வேளாண் பொருட்களை கொண்டுசெல்லவும், வேளாண் பணிகளை மேற்கொள்வதிலும் எந்தவித தடையும் இல்லை என அரசு விதிவிலக்கு அளித்திருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் இந்த ஆண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டது.
தற்போது, ஊரடங்கு காரணமாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தினால், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக, ஒருநாள் அல்லது பத்து தினங்களுக்கு ஒருமுறை மட்டும் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதால், விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசு நெல் மூட்டைகளை தொடர்ந்து கொள்முதல் செய்வதற்கான வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கடையடைப்பு: காரணம் என்ன?