திருநெல்வேலி: முழு ஊரடங்கில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய அவர், "மாவட்டத்தில் நகர்புறம், ஊரகப் பகுதிகளில் 535 நடமாடும் காய்கறி கடைகள் செயல்படும். காய்கறிகள், பழங்கள் விற்பனையின் விலையை கண்காணிக்க திட்ட அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருக்கிறது. மேலும், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் வரவுள்ளது.
இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.