திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி நரசிங்கநல்லூரைச் சேர்ந்த திருநங்கைகள் அனு பூர்ணிமா, பவானி, அவரது கணவர் முருகன் ஆகிய மூவரும் கடந்த சில தினங்களாக காணவில்லை எனக்கூறி 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று (ஆகஸ்ட் 21) சுத்தமல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ், தங்கவேலு, செல்லத்துரை உள்ளிட்டோர் சேர்ந்து பவானி உள்பட மூவரை கொலை செய்துவிட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தார்.
அவர், ஒரு மணி நேரம் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் ரிஷிகேஷ், தங்கவேலு, செல்லத்துரை ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் மூவரும் காவல்துறையினரின் பாதுகாப்பில் பாளையங்கோட்டை காவல் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விசாரணையில், கிடைத்த தகவலின்படி கக்கன் நகர் பகுதியில் கிணற்றில் கிடந்த 3 சாக்கு மூட்டைகள் எடுக்கப்பட்டன. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் உள்ளே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், விசாரணையில், மூன்று பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து திருநங்கை சக்தி கூறுகையில், கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி அனு பூர்ணிமாவை காணவில்லை. தொடர்ந்து பவானியின் கணவர் முருகனும் காணாமல் போனார். குழந்தை வாங்கித்தருவதாக கூறி முருகனிடம் ரிஷிகேஷ், தங்கவேலு மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர். அந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் பவானி உள்பட மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்"என்றார்.
இதையும் படிங்க: காதலிக்காக பட்டுபுடவை... காசுக்காக நகை; தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடியவர் வாக்குமூலம்!