திருநெல்வேலி: வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளியைச் சேர்ந்த கணபதியின் மகன் ஆறுமுகம் (48). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடு மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆறுமுகம், வெள்ளாங்குளியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரவநல்லூர் காவல் துறையினர் ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இளம் பெண்ணிற்கு மிரட்டல் - காவலர் கைது