ETV Bharat / state

'ஒரே கட்சி ஒரு நபர் ஆட்சி' மத்திய அரசு மூர்க்கத்தனம்! - முத்தரசன்

திருநெல்வேலி: 'ஒரே கட்சி ஒரு நபர் ஆட்சி' என்பதை நோக்கி மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

mutharasan
author img

By

Published : Jul 12, 2019, 8:26 PM IST

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,"மாநில அரசின் கருத்தை பெற வேண்டும், தன்னிச்சையாக செயல்படக்கூடாது. 'ஒரே கட்சி ஒரே நபர் ஆட்சி' என்ற நிலையை நோக்கியே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. 303 இடங்களை பெற்றபோதிலும் 33% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது, 67% மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை எண்ணி செயல்பட வேண்டும். 8 வழிச்சாலை அமைந்தால் மாநில அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதற்காக சிலர் செயல்படுகின்றனர் என முதலமைச்சர் கூறுவது தவறானது.

20% கமிஷனுக்காகவே இத்திட்டம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது. உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு 33% இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மாதர் சங்கம் சார்பில் மாநில மாநாடு நெல்லையில் நடத்தப்படும்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் அணுகுமுறைகளில் மாற்றம் உள்ளது. முதலமைச்சர் மத்திய அரசின் முடிவுகளை அப்படியே செயல்படுத்த நினைக்கிறார். துணை முதலமைச்சர் எதிர்க்கட்சிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பை அளிப்பதோடு, 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில்கூட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்தார்" என்று கூறினார்.

Intro:ஒரே கட்சி ஒரு நபர் ஆட்சி என்பதை நோக்கி மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுகிறது மாநில அரசு அனைத்து திட்டங்களிலும் 20% கமிஷன் பெறும் அரசாக உள்ளது நெல்லையில் முத்தரசன் பேட்டி
Body:தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனை நீதிமன்றமே சுட்டி காட்டி உள்ளது கொலைகள் முந்திய ஆட்சியிலும் நடைபெற்றது தற்போதும் நடைபெறுகிறது என முதல்வர் கூறுவது கொலை செய்பவர்களை ஊக்குவிப்பது போன்றது இது கண்டனத்திற்குரியது
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்றே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டது நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே பட்ஜெட் அம்சங்கள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது
பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு களை விற்பது தவறானது மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 1.5 லட்சம் கோடி திரட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது
கஸ்தூரி ரெங்கன் கமிட்டி சமர்பித்துள்ள கல்விக் கொள்கை நிறை வேற்றப்படும் என்பது அவர்கள் நினைத்ததை நிறைவேற்றும் தன்னிச்சையான போக்கை காட்டுகிறது ஜனநாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை மூர்க்கத்தனமான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மை இல்லை நியூட்ரினோ திட்டம் சாதக பாதகங்களை கூறி மக்களின் அனுமதியை பெற்று திட்டம் செயல்படுத்த வேண்டும் மாநில அரசின் கருத்தை பெற வேண்டும் தன்னிச்சையாகசெயல்பட கூடாது ஒரே கட்சி ஒரே நபர் ஆட்சி என்ற நிலையை நோக்கி யே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது - 303 இடங்களை பெற்ற போதிலும் 33% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது 67% மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை எண்ணி செயல்பட வேண்டும் 8 வழிச்சாலை அமைந்தால் மாநில அரசிற்கு. நற்பெயர் கிடைக்கும் என்பதற்காக சிலர் செயல் படுகின்றனர் என முதல்வர் கூறுவது தவறானது
20% கமிசனுக்காகவே இந்த திட்டம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது பெண்களுக்கு உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்றிய மத்திய அரசு 33% இட ஒதுக்கிட்டை நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை இதனை நிறைவேற்ற வலியுறுத்தி அக். 2, 3, 4 தேதிகளில் மாதர் சங்கம் சார்பில் மாநில மாநாடு நெல்லையில் நடத்தப்படும்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது எந்த வித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை
ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களால் 10 ஆண்டு களில் விவசாய நிலங்களே இல்லை என்ற நிலை உ ருவாகும்
பாஜகவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை எதிர் காலத்தில் எக்கட்சியும் இல்லாத நிலையை உருவாக்க முயற்சி செய்கிறது முதலமைச்சர் துணை முதலமைச்சர் அணுகுமுறைகளில் மாற்றம் உள்ளது முதலமைச்சர் மத்திய அரசின் முடிவுகளை அப்படியே செயல்படுத்த நினைக்கிறார் துணை முதலமைச்சர் எதிர்க்கட்சிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பை அளிப்பதோடு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் கூட துணை முதலமைச்சர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அதோடு அவர்களின் கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்தார் முத்தரசன் நெல்லையில் பேட்டியளித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.