ETV Bharat / state

ஒண்டிவீரனின் 249ஆவது நினைவுநாள் அனுசரிப்பு

author img

By

Published : Aug 20, 2020, 2:12 PM IST

திருநெல்வேலி: ஒண்டிவீரன் நினைவுநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லையில் அனுசரிக்கப்பட்ட ஒண்டிவீரனின் 249ஆவது நினைவு தினம்!

வெள்ளையருக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த மன்னர் பூலித்தேவரின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்த ஒண்டிவீரனின் நினைவுநாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில், 249ஆவது நினைவுநாள் இன்று (ஆக. 20) திருநெல்வேலி மாவட்டத்தில் கேடிசி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் நினைவிடத்துக்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லையில் அனுசரிக்கப்பட்ட ஒண்டிவீரனின் 249ஆவது நினைவுநாள்!

தொடர்ந்து பல்வேறு சாதி அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், ஒண்டிவீரன் நினைவிடம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாதி அமைப்புகள் மாலை அணிவிக்க வரும்போது தகராறு எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவையில் அனுசரிக்கப்பட்ட ஒண்டிவீரனின் 248ஆவது நினைவு தினம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.