ETV Bharat / state

சாலையில் தேங்கிய மழைநீர்- வழுக்கி விழுந்த முதியவர் - tirunelveli

நெல்லை சாலையில் தேங்கி கிடந்த மழை நீரில் முதியவர் வழுக்கி விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தேங்கிய மழைநீர்- வழுக்கி விழுந்த முதியவர்

author img

By

Published : Jul 28, 2022, 9:55 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 27) மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக டவுன் சந்திப்பு, பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் டவுன் வ.உ.சி தெருவில், சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் முதியவர் ஒருவர் வழுக்கி விழுந்தார்.

அதாவது அந்த வழியாக ஒரு கையில் சைக்கிள் மற்றும் மறு கையில் குடைபிடித்தபடி நடந்து சென்ற முதியவர் கால் வழுக்கி கீழே விழுந்து தண்ணீரில் நனைந்தபடி கிடந்தார். இதை கவனித்த சிலர் ஓடி சென்று முதியவரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். . அதாவது நெல்லை மாநகரில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

சாலையில் தேங்கிய மழைநீர்- வழுக்கி விழுந்த முதியவர்

இருப்பினும் சாலை ,குடிநீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை பிரச்சனைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த ஒரு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகார் பொதுமக்களிடம் இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் சாதாரண மழைக்கே சாலையில் செல்வோர் வழுக்கி விழும் அளவிற்கு சாலை மிக மோசமாக இருப்பதால் இதுதான் ஸ்மார்ட் சிட்டியா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Video:பொள்ளாச்சியில் பெய்த மழையில் ஆடிய இளைஞர் - வைரலாகும் வீடீயோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.