திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு உலைகளில் அணுக் கழிவுகளை பாதுகாத்து வைப்பதற்கான AFR (Away From Reactor) எனும் சேமிப்பு மையம் கட்டப்படுகிறது.
கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் நிலையத்திற்கு அணுக்கழிவு கட்ட தற்காலிக அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்த சேமிப்புக் கிடங்கை கட்ட தொழில்நுட்ப குறைபாடு நிலவுவதால், இதனைக் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு கூறியதையடுத்து 2022ஆம் ஆண்டுக்குள் சேமிப்பு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் இரண்டு அணு உலைகளின் அணுக்கழிவுகளை சேமிப்பதற்கான சேமிப்பு மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் ஜுலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டாட்சியர் அலுவலகங்களில் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உள்ளூர் மக்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் பெரும் கேடுகளை, ஆபத்துக்களை உருவாக்கும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் நிலை என்னவாகும் என்று கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் புலம்பி வருகின்றனர். கூடங்குளத்திற்கு அதிக எதிர்ப்புகள் இருந்துவரும் நிலையில் தற்போது புதிய வரவாக ஆபத்து மிக்க அணுக்கழிவுகளை கொட்ட மத்திய அரசு திட்டம் தீட்டிவருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Intro:Body:
தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த ஏவுகணை
அணுக்கழிவுக் கிடங்கி
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, கன்னட மக்கள் கூடங்குளம் கழிவுகளை அவர்கள் மாநிலத்தில் புதைக்க விடமாட்டோம் என்று ஒரு மூன்று நாள் போராட்டத்தை நடத்தி அதைத் தடுத்தார்கள். அப்போது மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஒவ்வொரு உலையிலும் ‘’எரிகோல் சேமிப்புத் தேக்கம்’ (Spent Fuel Pool) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏழு இயங்கு வருடங்களில் (operation years) எரிக்கப்பட்ட எரிகோல்களை மட்டுமே சேமித்து வைக்கமுடியும். பின்னர் அந்தக் கழிவுகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவேண்டும். அந்த எரிகோல் கழிவுகளை பாதுகாத்து வைப்பதற்கு AFR (Away From Reactor) எனும் ‘அணுஉலையிலிருந்து அகலே’ எனும் அமைப்பு கட்டப்படுகிறது.
அணுக்கழிவுகளின் அளவு அதிகரிக்கும்தோறும், அவற்றை சேமித்துவைக்கும் கிட்டங்கிகளின் தேவையும் அதிகரிக்கிறது. அணுக்கழிவுகளை மறுசுழற்சி (reprocessing) செய்தாலும் கழிவுக் கிட்டங்கிகளின் தேவை அதிகரிக்கத்தான் செய்யும். அணுஉலை வளாகங்களுக்குள் கட்டப்படும் இந்த AFR (Away From Reactor) எனும் ‘அணுஉலையிலிருந்து அகலே’ அமைப்பை அரசேக் கட்டி நிர்வகிக்கும்.
‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மீது வழக்கு தொடுத்தபோது, உச்சநீதிமன்றம் 02/07/2018 அன்று ஒரு தீர்ப்பளித்தது. அதாவது ஏப்ரல் 30, 2022 தேதிக்குள் AFR (Away From Reactor) எனும் ‘அணுஉலையிலிருந்து அகலே’ கூடங்குளம் அணுஉலையில் கட்டப்படவேண்டும் என்று ஆணையிட்டது.
அதற்கான ஆயத்த வேலைகளை மத்திய அரசும், அணுசக்தித் துறையும் தற்போது துவங்குகின்றன. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் யூலை 10 அன்று இராதாபுரத்தில் அரசுப்பள்ளியில் வைத்து நடக்கவிருக்கிறதாம். இது குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டாட்சியர் அலுவலகங்களில் இருக்கின்றனவாம். ‘டிஜிட்டல் இந்தியா’ இவற்றை இணையத்தில் பதிவேற்றாதது ஏன் என்று தெரியவில்லை.
கூடங்குளம் அணுஉலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும், 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் ஆறு முதல் எட்டு அணுஉலைகள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை (reprocessing plant), உப்பகற்றி ஆலைகள் (desalination plants), நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிகவும் ஆபத்தானது.
1-2 அணுஉலைகளுக்கும் 3-4 அணுஉலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதேபோல, 3-4 அணுஉலைகளுக்கும் 5-6 அணுஉலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியானச் சூழலில் AFR (Away From Reactor) எனும் ‘அணுஉலையிலிருந்து அகலே’ எனும் அமைப்பை இதே வளாகத்தில் எப்படிக் கட்டமுடியும்? அப்படியேக் கட்டினாலும், அது உள்ளூர் மக்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் பெரும் கேடுகளை, ஆபத்துக்களை உருவாக்கும் என்பது திண்ணம்.
எனவே அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதற்கு எதிராகவும், கூடங்குளம் அணுஉலையின் விரிவாக்கத்துக்கு எதிராகவும், நவம்பர் 19, 2018 முதல் மே 19, 2019 ஆறு மாதங்களாக மூடிக்கிடந்த முதல் அணுஉலை இன்று மீண்டும் மூடப்பட்டிருப்பதன் பின்னாலுள்ள மாபெரும் ஊழல்கள், பித்தலாட்டங்கள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் மக்களிடம் பரப்புரைகளை மேற்கொள்ளும். கூடங்குளம் அணுஉலைகளுக்கு எதிரானப் போராட்டம் இறுதி வெற்றி கிட்டும்வரைத் தொடரும்!
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
யூன் 4, 2019
Conclusion: