ETV Bharat / state

'இந்துக்களில் மட்டும் இல்லை... இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களிலும் சங்கிகள் இருக்கின்றனர்' - பீட்டர் அல்போன்ஸ்

இந்துகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லா மதத்திலும் சங்கிகள் இருக்கிறார்கள், என தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்  அளித்த பேட்டி

author img

By

Published : Nov 5, 2022, 12:06 PM IST

திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“சிறுபான்மையின மாணவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 43 ஆயிரத்து 23 பேருக்கு கல்வி உதவித்தொகையாக 7 கோடியே 11 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சரி செய்ய தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்கிறோம்.

தமிழ்நாடு ஆளுநர் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கும். இது அவரது பதவிக்கு ஒவ்வாத செயல். தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை செய்யவும் அண்ணாமலை, ஆளுநர் முயற்சிக்கிறார்கள். ஒன்றிய அரசு, பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது

தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டி

ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அவமானம்.
இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி.

கோவை மாவட்டத்தை சனாதனத்தின் சோதனை கூடமாக மாற்ற நினைக்கிறது. குஜராத்தை போல சனதானத்தின் சோதனை களமாக கோவையை, கொங்கு மண்டலத்தை மாற்ற முயற்சி நடக்கிறது. இந்துகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லா மதத்திலும் சங்கிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் மதக்கலவரம் நடந்த இடங்களிலெல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது, இதே போல் தமிழ்நாட்டில் நடக்காது.

அமித்ஷா தெரிவிப்பது போல் காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் இல்லை காங்கிரஸ் அழிக்க ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.