ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு: உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை - nellai kudagulam issue

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இயக்குநர் மனோகர் காட்பாலே தெரிவித்துள்ளார்.

nellai-power-plant-issue
nellai-power-plant-issue
author img

By

Published : Jul 20, 2021, 6:46 PM IST

நெல்லை: கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் ரஷ்ய நாட்டின் உதவியோடு ஒன்றிய அரசின் அணுமின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த அணுமின் நிலையத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அணுமின் நிலைய கழிவுகளை இங்கே புதைக்கக் கூடாது. அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

குறிப்பாக அணுமின் நிலைய போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து-வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அப்பாவு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பில் இன்று (ஜூலை 20) பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை

இதில் அணுமின் நிலையம் சார்பில் வளாக இயக்குநர் மனோகர் காட்பாலே பங்கேற்றார். அப்போது அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.

கூட்டத்தின் முடிவில் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்கள், அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், ராதாபுரம் தாலுகாவைச் சேர்த்த 200 இளைஞர்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை சர்வதேச தரத்துடன்கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என இயக்குநர் மனோகர் காட்பாலே உறுதியளித்தார்.

4, 6ஆவது அணு உலைகள்

மேலும், 3, 4ஆவது உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியபோது இப்பகுதியில் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு நலத் திட்டப்பணிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 4, 6ஆவது உலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் கூடுதலாக நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அப்பாவு வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.