தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், அதன் பாதுகாப்பை முன்னிட்டு, நெல்லை மாநகர காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின், கொடி அணிவகுப்பு நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டவுன் ஆர்ச் பகுதியில் தொடங்கி கீழரத வீதி, தெற்குரத வீதி, மேற்குரதவீதி, தொண்டர் சன்னதி, பாறையடி ஆகிய பகுதிகள் வரை நடைபெற்றது.
இக்கொடி அணிவகுப்பில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், நகர உதவி ஆணையாளர் சதீஷ்குமார், ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, நகர காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி மற்றும் காவலர்கள் மத்திய துணை ராணுவ படையினர் பங்குபெற்றனர்.
இதையும் படிங்க: எம்எல்ஏக்களும் குற்றப் பின்னணியும் - கடந்த தேர்தல் ஒரு அலசல்!