ETV Bharat / state

நெல்லை மருத்துவக் கல்லுரியில் 4 மாணவிகளுக்கு கரோனா உறுதி

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நான்கு மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

author img

By

Published : Aug 27, 2021, 6:22 AM IST

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி

திருநெல்வேலி: கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்தவருகிறது. வரும் 13ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால் மருத்துவத் துறை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என்று அரசு அனுமதி வழங்கியது.

கடந்த வாரம் 16ஆம் தேதி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் மூன்று மாணவிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேலும் 200 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக விடுதியில் உள்ள மாணவிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு தங்கியுள்ள அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது செய்முறைத் தேர்வுகள் தகுந்த இடைவெளியோடு நடத்தப்படும் என்று நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு - இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.