நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாவட்டத்தில் பிரதான குளங்களும் நிரம்பியுள்ளதால் பல்வேறு இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குறிப்பாக நெல்லை டவுன் அருகே உள்ள கிருஷ்ணபேரி, கண்டியபேரி குளங்கள் நிரம்பியுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் டவுன் கோடீஸ்வர நகர் அருகே இன்று மிகப் பெரிய ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக மரம் விழும்போது யாரும் அந்த பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தற்போது பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ்வழியாக பணிக்கு செல்பவர்களும்,பள்ளி செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க : School Leave : மழை பாதிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை