திருநெல்வேலி: மாவட்டம் ஊருடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் இவர் டவுன் அருகே உள்ள நயினார் குளத்தில் மீன் பாசி குத்தகையை அமைக்க கடந்த ஜனவரி 31ஆம் தேதி எடுத்துள்ளார்.இதனை மற்றொரு தரப்பைச் சேர்ந்த நபர்கள் ரத்து செய்ய வேண்டும் என கூறி புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து இரு தரப்பு பிரச்சினையை கருத்தில் கொண்டு நயினார் குளத்தில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து மீன் பிடிக்க அனுமதி வேண்டும் என சுப்பிரமணியன் தரப்பைச் சேர்ந்த நபர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் தன் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருவாடுகளை மாலைகளாக அணிவித்து விவசாயி சுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணியம் கூறுகையில்:- பொதுப்பணித்துறையின் சார்பாக 10 குளங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது நான் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை குளத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன்.ஆனால் ஒரு முறை கூட இது பேன்ற நிபந்தனைகளை விதித்தது கிடையது தற்போது ஒரு தனிமனிதனின் தூண்டுதலின் பேரில் தன்னை மீன் பிடிக்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றன.
கடந்த 2 வருடங்களாக இது போன்ற எந்த ஒரு நிபந்தனைகளும் விதிக்காத நிலையில் இப்போது மட்டும் ஏன் விதித்துள்ளார்கள்.இதனை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் என கேட்டதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.இதேபோல் 9 குளங்கள் உள்ளன அவற்றில் எல்லாம் இன்றைக்கு வரை மீன் பிடுத்து கொண்டு இருக்கிறார்கள் தனக்கு மட்டும் ஏன் தடை விதித்துள்ளார்கள்.
நான் ஒரு பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவன் என்பதாலா ? மேலும் பொதுப்பணித்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளில் ஒன்றில் கூட குறிப்பிட்ட காலவரையறைக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனைகளும் கிடையாது.அடுத்த தண்ணீர் வரும் வரை குளத்தில் மீன் பிடித்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனக்கு ஒரு சட்டம் அவர்களுக்கு ஒரு சட்டமா? எனக் கேள்வி எழுப்பினார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது தற்போது வரை அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 579 ரூபாய்க்குக குளத்தை குத்தகைக்கு எடுத்து 10 லட்சம் ரூபாய்க்கு மீன்களை வாங்கி வளர்த்து வந்துள்ளேன். குளத்தில் அமலை செடிகள் அதிகமானதால் அதனை நீக்குவதற்கு 1.5 லட்சம் ரூபாய் என மொத்தமாக 15 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்.
இந்த சூழ்நிலையில் நெல்லையப்பன் மற்றும் அரசு அதிகாரிகளான,தங்கராஜ் பாண்டியன்,மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து எனக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே மீன் பிடிக்க அனுமதி அளிப்பதாக கூறுகின்றனர்.இதுகுறித்து 2 முறை மனு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்க படவில்லை.இதனால்தான் தன் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:திமுக தலைவராக மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டு பயணம்.. கடந்து வந்ததும், கடக்கப் போவதும் என்ன..?