ETV Bharat / state

நெல்லையில் 1.55 லட்சம் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்! - மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்

திருநெல்வேலி: மாவட்டத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

nellai-collector-shilpa-prabhakar-issues-notices-to-students

author img

By

Published : Jul 21, 2020, 2:54 PM IST

கரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. எனவே பள்ளிகளில் சத்துணவு திட்டத்தால் பயன்பெற்றுவந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில், உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு சாப்பிட்டுவந்த மாணவர்களுக்கு, ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் உலர் உணவுப் பொருள்கள் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 68 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் மையங்களில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்படவுள்ளன.

அதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றுவரும் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 179 மாணவர்களுக்கு தலா 3.1 கிலோ அரிசி, 1.2 கிலோ பருப்பு வழங்கப்படவுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வரை பயின்றுவரும் 51 ஆயிரத்து 525 மாணவர்களுக்கு தலா 3.650 கிலோ அரிசி, 1.250 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படவுள்ளன.

மொத்தமாக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 755 மக்களுக்கு உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவற்றை பள்ளிகளிலே அளிக்கப்படவுள்ளன. இந்த உணவுப் பொருள்கள் எந்த நாள்களில் எந்த நேரத்தில் வழங்கப்படும் என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாகப் பள்ளிகளில் தகவல் அறிக்கையில் நோட்டீஸ் ஒட்டப்படும். எனவே மாணவர்கள் அப்போது தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, உணவுப் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.