தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஜீன் 30ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன.
வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. பொருளாதாரச் சிக்கல் ஒருபுறம் இருந்தாலும், நாளுக்கு நாள் கரோனா பாதிப்பும் அதிகரித்து கொண்டே செல்வதால், அரசும் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த பாப்புராஜ் என்பவர், முகக்கவசங்களை விற்று, அதில் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு ஊரடங்கால் நலிவுற்றிருக்கும் பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அந்த வகையில், முகக்கவசங்களை மொத்தமாக கொள்முதல்செய்து பேருந்து நிலையம், காய்கறிச் சந்தைகளில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த நெல்லை மாநகரக் காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், பாப்புராஜிடம் முதல் நபராக முகக்கவசம் வாங்கி, விற்பனையைத் தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சேமித்த பத்தாயிரம் ரூபாயை கரோனா நிவாரணத்துக்கு வழங்கிய சிறுவர்கள்!