ETV Bharat / state

கோவா சுற்றுலா செல்லும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் - சிறுசேமிப்பின் மூலம் சாதித்த நெகிழ்ச்சி

Village People Flight Travel: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாட்டான்பட்டி கிராம மக்கள் 130 பேர் சிறு சேமிப்பின் மூல சேர்த்து வைத்த பணத்தின் மூலம் தங்களது நெடுநாள் ஆசையான விமான பயணத்தை மேற்கொள்ள உள்ளது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

near Tirunelveli thattanpatty Village People travel by plane from their small savings
சிறு சேமிப்பின் மூலம் சிறகடிக்க போகும் தாட்டான்பட்டி மக்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 12:07 PM IST

திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இளைஞர்கள் சிலர் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட துறைகளிலும் சேவையாற்றி வருகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்புகள் மூலமாக பணம் சேர்த்து அந்த பணத்தில் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் விமானத்தில் சொந்த ஊருக்கு வருவதை அறிந்து இப்பகுதியிலுள்ள பெண்கள் உள்ளிட்ட கிராமத்து மக்களுக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனதிற்குள் ஆசையை வளர்த்துள்ளனர்.

கிராமத்து மண் வாசனையோடு அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வரும் இம்மக்களுக்கு விமான பயணம் என்பது பெரும் கனவாகவே இருந்தது. இந்த நிலையில் பல நாள் கனவு நிறைவேறும் விதமாக கோவாவில் உள்ள சவேரியார் ஆலயத்துக்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பயணம் நிச்சயம் விமான பயணமாக தான் இருக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை திரட்டி வெற்றிகரமாக கோவாவிற்கு விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர். வரும் ஜனவரி 20ஆம் தேதி விண்ணில் பறக்க இருக்கின்றனர். முதற்கட்ட கட்டமாக தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 130 பேர் விமானத்தில் பயணிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம், லூர்து சாமி, ஜோசப், பிரின்ஸ் நிக்கோலஸ், ராயப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அருளானந்தம் கூறுகையில், “சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். மேலும், எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என விரும்பினர் அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்று, ரயிலில் திரும்ப உள்ளோம். போக்குவரத்து, உணவு என நபருக்கு சுமார் 10 ஆயிரம் வரை செலவாகும்” என்றார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒருவரான லூர்து சாமி கூறுகையில், “எங்கள் கிராம மக்கள் சுமார் 130 பேர் செல்ல இருப்பதால் பிரத்யேக தனி விமானத்தில் செல்ல முயற்சித்தோம். அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் தற்போது தனித்தனியாக பதிவு செய்துள்ளோம். ஏற்கனவே எங்கள் கிராமத்தினர் மிகவும் ஒற்றுமையாக இருக்கும் நிலையில் தற்போது இந்த பயணம் எங்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து ஞானஜுவ மணி என்ற பெண்மணி தெரிவிக்கையில், “எங்கள் கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் பீடி சுற்றும் தொழிலையே செய்து வருகிறோம். பெரும்பாலும் வெளி பகுதிகளுக்கே செல்வதில்லை. அவ்வப்போது பேருந்து, ரயிலில் மட்டுமே சென்று வந்தாலும் தற்போது முதன் முதலாக விமானத்தில் செல்ல இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இல்லதரசி சொர்ணமணி கூறுகையில், “எங்கள் பகுதி இளைஞர்கள் விமானத்தில் வரும்போது எங்களுக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்வது எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ளதாக இருக்கிறது. மேலும், இந்த தருணம் எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணமாக இருக்கும்” என்றார்.

மேலும், கிறிஸ்டி சாராள் பேசுகையில், “விமானத்தில் சென்று சவேரியாரை பார்ப்பதை தற்போது எண்ணும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது உறவினர்கள், பக்கத்து கிராமத்தினரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். அடுத்த மாதம் செல்ல இருந்தாலும் தற்போது இருந்தே எங்கள் பகுதியினருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

சிறு சேமிப்பு மூலமாக விமானத்தில் கிராம மக்கள் பறக்க இருப்பது சக தாட்டான்பட்டி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி கிராம மக்களேயே நெகிழ்சசியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுபார்க்க இலவச சிறப்பு முகாம்.. உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.