ETV Bharat / state

நாங்குநேரி கோர விபத்தில் இளைஞர் தீயில் கருகி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டிராக்டர் மீது விலையுயர்ந்த பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் தீயில் கருகி உயிரிழந்தார்.

இளைஞர் பலி
இளைஞர் பலி
author img

By

Published : Mar 26, 2022, 1:30 PM IST

Updated : Mar 26, 2022, 2:45 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரி அடுத்த வாகைக்குளம் அருகே பெரும் உடையார் சாஸ்தா கோயில் என்ற இடத்தில் சாலை ஓரம் இன்று (மார்ச் 26) அதிகாலை விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் கவனித்தனர். அருகே சென்று பார்த்தபோது, அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.

உடனடியாக நாங்குநேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயில் கருகி பலியான இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர் பலி

இதுகுறித்து நாங்குநேரி காவல் துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த இளைஞர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த உதய் (25) என்பது தெரியவந்துள்ளது. இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க நெல்லையில் இருந்து சென்னைக்கு பார்சலில் அனுப்புவதற்காக இன்று அதிகாலை உதய் தனது வீட்டிலிருந்து கிளம்பி திருநெல்வேலி நோக்கி விரைந்துள்ளார்.

உதய் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. அதிகாலை 4.30 மணி அளவில் நாங்குநேரி அடுத்த வாகைக்குளம் அருகே பெரும் உடையார் சாஸ்தா கோயில் என்ற இடத்தில் முன்னால் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக உதய் மோதியுள்ளார்.

இதில் அவரது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது உதய் மீதும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் உறக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் அல்லது அதிவேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மலை பிரதேசங்களில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடக்கூடாது - நீதிமன்றம் கேள்வி

Last Updated : Mar 26, 2022, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.