ETV Bharat / state

நாங்குநேரி இடைத்தேர்தல்: நெல்லையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

author img

By

Published : Sep 21, 2019, 8:47 PM IST

நெல்லை: நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.

nanguneri-by-election

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஹெச். வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, தான் வகித்துவந்த எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில், தற்போது அந்த தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும் என்றும் நாங்குநேரி தொகுதியில் மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனவும் கூறினார்.

nanguneri-by-election
வட்டாட்சியர் அலுவலகம், நாங்குநேரி

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நடேசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 23ஆம் தேதி முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

  • மாவட்டம் - நெல்லை
  • சட்டப்பேரவைத் தொகுதி - நாங்குநேரி
  • பூத் எண்ணிக்கை - 299
  • மொத்த வாக்காளர்கள் - 2,56,414
  • ஆண்கள் - 1,27,025
  • பெண்கள் - 1,29,385
  • மூன்றாம் பாலினம் - 4

இதையும் படிங்க...

அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத் தேர்தல்!

Intro:இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தை தொடந்து நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தைவிதி பொருந்தும். நாங்குநேரி தொகுதியில் மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

Body:இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தை தொடந்து நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தைவிதி பொருந்தும். நாங்குநேரி தொகுதியில் மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டத்தை அடித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில்,

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் மொத்தம் 299 பூத்கள் உள்ளன.
மொத்த வாக்காளர்கள் 2,56,414
ஆண். 1,27,025
பெண். 1,29,385
மூன்றாம் பாலினம். 4
மொத்தம்: 2,56,414

இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தை தொடந்து நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தைவிதி பொருந்தும். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார் .

23/09/19 முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகளில். அதில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.