ETV Bharat / state

நீதிமன்ற ஊழியர் இறப்பில் மர்மம்: கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இறுதிச்சடங்கு

நெல்லை: மணிமுத்தாறில் நீதிமன்ற ஊழியரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பெயரில், அவரின் இறுதிச்சடங்கைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 mystery in death: buried cancelled in last minute

author img

By

Published : Jul 30, 2020, 4:56 AM IST

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் கனகசபாபதி (55). இவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆவண எழுத்தராகப் பணிபுரிந்துவந்தார். இந்தச் சூழலில் கனகசபாபதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இன்று உயிரிழந்தார்.

மாரடைப்பு காரணமாக கனகசபாபதி உயிரிழந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர். இதையடுத்து அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கத்திற்காக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையில் கனகசபாபதி இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து இடுகாட்டிற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கடைசி நேரத்தில் கனகசபாபதியின் இறுதிச்சடங்கைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

கனகசபாபதி உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அடையாளம் தெரியாத நபர்கள் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.