ETV Bharat / state

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குனேரியில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயகுமார்! - minister udayakumar

திருநெல்வேலி: தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அமைச்சர் உதயகுமார்
author img

By

Published : Oct 8, 2019, 8:41 AM IST

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குள்பட்ட அரியகுளம் பகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரப்புரையில் ஈடுபட்டார்.

பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமார்

பரப்புரையின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயகுமார், அதிமுகவின் வேட்பாளர் உங்கள் ஊரில் ஒருவர், ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளரை எங்கிருந்தோ இறக்குமதி செய்துள்ளது என்று கூறினார். மேலும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதும் ஒவ்வொரு தொண்டர்களின் வீடுகளுக்கும் வந்து நன்றி தெரிவிப்பார் என்றும் உதயகுமார் கூறினார்.

இதையும் படிங்க: மனைவிக்காக கர்ப்பிணியாக மாறிய தொப்பை கணவர்- வைரல் புகைப்படங்கள்

Intro:நெல்லையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். Body:நெல்லையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வருகின்ற 21ம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரங்கள் தேர்தல் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அரியகுளம் பகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயகுமார் அதிமுகவின் வேட்பாளர் உங்கள் ஊரில் ஒருவர் ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளரை எங்கிருந்தோ இறக்குமதி செய்துள்ளது என்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒவ்வொரு தொண்டர்களின் வீடுகளுக்கும் வந்து நன்றியை தெரிவிப்பார் என்றும் பேசினார். இதனை அடுத்து அதிமுக வேட்பாளரும் அமைச்சரும் மக்களிடையே வாக்குகளை சேகரித்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.