ETV Bharat / state

ஈழம் குறித்து பேச வைகோவிற்கு மட்டுமே தகுதி உண்டு: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி - seeman against speech in rajendra balaji

திருநெல்வேலி: ஈழத் தமிழர் விவகாரத்தில் சீமானை கடுமையாகச் சாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்த விவகாரம் குறித்து பேச மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மட்டுமே தகுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

minister rajendra balaji
author img

By

Published : Oct 15, 2019, 9:38 PM IST

Updated : Oct 16, 2019, 3:29 PM IST

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, இந்திய அரசின் சார்பில் வரவேற்கும் பொறுப்பை தமிழ்நாடு முதலமைச்சரிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியது பெருமை மிக்க விஷயமாகும். இதில் விருந்துக்கு முதலமைச்சர் வரவில்லை, மருந்துக்கு வரவில்லை என துரைமுருகன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

களக்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி

ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சீமான் பேசியது தீவிரவாதத்தைத் தூண்டும் செயல். அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக அரசை பற்றி குறை கூற சீமானுக்கு தகுதி இல்லை. மைக் கிடைத்துவிட்டால் வீராவேசம் பேசுவதற்கு ராஜீவ் காந்தி ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல. அவர் இந்த நாட்டின் முன்னாள் பிரதமர். சீமான் பேச்சு கொழுப்பேறிய பேச்சு. இதுபோன்று பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் சீமானைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும். சீமான் என்ன யோக்கியரா? அவர் குடியிருந்த வீட்டிற்கு 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்க வக்கில்லாதவர் சீமான். அவர் ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கொலைகாரர்கள், ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறார். ஈழப் பிரச்சனை குறித்து பேச தகுதியான ஒரே எதிர்க்கட்சித் தலைவர் வைகோ தான்’ என்று தெரிவித்தார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியதற்காக சீமான் மீது, வன்முறையைத் தூண்டுதல், தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:சீமான் ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கொலைகாரர்கள் ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறார். ஈழ பிரச்சனை குறித்து பேச தகுதியான ஒரே எதிர்க்கட்சி தலைவர் வைகோ தான் என நாங்குநேரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.Body:சீமான் ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கொலைகாரர்கள் ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறார். ஈழ பிரச்சனை குறித்து பேச தகுதியான ஒரே எதிர்க்கட்சி தலைவர் வைகோ தான் என நாங்குநேரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காட்டில் இடைத்தேர்தல் கட்சி பணிக்காக வந்துள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

சீன அதிபரை இந்திய அரசின் சார்பில் வரவேற்கும் பொறுப்பை தமிழக முதல்வரிடம் மோடி வழங்கியது பெருமை மிக்க விஷயமாகும் இதை விருந்துக்கு முதல்வர் வரவில்லை மருந்துக்கு வரவில்லை என துரைமுருகன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அட்டாக் வந்து இறந்தார். இது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் அனைவரும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மர்மமும் இல்லை ஸ்டாலின் இதுபற்றி பேசுவது தர்மமும் இல்லை. கஜா புயலின் போது ஏராளமான மரங்கள் சேதமடைந்த போதும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பாதுகாத்தவர் நமது முதல்வர். ராஜீவ் காந்தி குறித்து சீமான் பேசியது தீவிரவாதத்தை தூண்டும் செயல் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக அரசை பற்றி குறை கூற சீமானுக்கு தகுதி இல்லை சீமான் என்ன யோக்கியனா குடியிருந்த வீட்டிற்கு 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்க வக்கில்லாதவர் சீமான் அவர் ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கொலைகாரர்கள் ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறார். ஈழ பிரச்சனை குறித்து பேச தகுதியான ஒரே எதிர்க்கட்சி தலைவர் வைகோ தான் இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
Last Updated : Oct 16, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.