ETV Bharat / state

‘அரசு விழாக்களில் சால்வை உள்ளிட்ட காதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்’ - thirunelveli

திருநெல்வேலி: அரசு விழாக்களில் சால்வை உள்ளிட்ட காதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/06-September-2019/4360977_373_4360977_1567791659457.png
author img

By

Published : Sep 6, 2019, 11:52 PM IST

ஏழை எளிய மக்களின் தயாரிப்புகளின் விற்பனையை பெருக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து காதி கிராப்ட் விற்பனை நிலையங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

காதி கிராப்ட் விற்பனை நிலையம் திறப்பு விழா
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கிராமத்தில் ஏழை எளிய மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையைப் பெருக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் காதி பொருட்கள் விற்பனையில் மிகவும் சிறந்த மாவட்டமாகும். கடந்த ஆண்டு கதர் பொருட்கள் 81 லட்சத்திற்கும் , கிராம உற்பத்தி பொருட்கள் 101.27 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்கு 165.55 லட்சத்திற்கும், கிராமப்பொருள் விற்பனை 169.89 லட்சத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் சால்வை உள்ளிட்ட கதர் தாயாரிப்பு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என மாநிலம் முழுவதும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Intro:அரசுதுறை சார்பில் நடக்கும் விழாக்களில் சால்வை உள்ளிட்ட காதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெல்லையில் விரிவாக்கம் செய்யப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியதுறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார் . Body:அரசுதுறை சார்பில் நடக்கும் விழாக்களில் சால்வை உள்ளிட்ட காதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெல்லையில் விரிவாக்கம் செய்யப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியதுறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார் .
         
ஏழை எளிய மக்களின் தயாரிப்புகளின் விற்பனையை பெருக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து காதி கிராப்ட் விற்பனை நிலையங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார் . விற்பனையைத் தொடங்கி வைத்தார் .
         
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கிராமத்தில் ஏழை எளிய மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையைப் பெருக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் காதி பொருட்கள் விற்பனையில் மிகவும் சிறந்த மாவட்டமாகும். கடந்த ஆண்டு கதர் பொருட்கள் 81 லட்சத்திற்கும் , கிராம உற்பத்தி பொருட்கள் 101.27 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்கு 165.55 லட்சத்திற்கும் , கிராமப்பொருள் விற்பனை 169.89 லட்சத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுதுறை சார்பில் நடக்கும் விழாக்களில் சால்வை உள்ளிட்ட கதர் தாயாரிப்பு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என மாநிலம் முழுவதும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
         
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.