ETV Bharat / state

நெல்லையில் வெள்ள அபாயம் இல்லை - மாவட்ட ஆட்சியர் - tirunelveli flood situation

நெல்லை: நெல்லை அணைகளில் 40,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் கரையோர மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க 188 மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு வெள்ள அபாயம் இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

vமாவட்ட ஆட்சியர் விஷ்ணு
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
author img

By

Published : Jan 13, 2021, 6:15 AM IST

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று (ஜன.12) காலைவரை இரு அணைகளில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்ட நிலையில், அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தற்போது மொத்தம் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் எதிரொலியாக டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது எனவே முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர் சந்திப்பு

இதை கண்காணிக்க காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கருப்பந்துறை பாலத்தை தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் கருப்பந்துறை பாலம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பலந்த மழை முக்கிய சாலைகள் துண்டிப்பு

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவுள்ளது. இந்த சூழலில் நெல்லையில் தற்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, "பாபநாசம் மணிமுத்தாறு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 21,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது. மாவட்டம் முழுவதும் 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 188 மீட்பு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தலா 25 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நெல்லை வருகின்றனர். தேவைப்பட்டால் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போதைக்கு ஆபத்தான சூழல் எதுவுமில்லை. தாழ்வான பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்தது அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.