ETV Bharat / state

நம்பி கோயில் அருகே நீரோடையில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு - நெல்லையில் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி

நம்பி கோயில் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நம்பி கோவில் மலைப் பகுதியில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி

author img

By

Published : Jul 24, 2022, 8:43 PM IST

Updated : Jul 24, 2022, 10:28 PM IST

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் 11 பேர் வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்கு சென்றனர். அதன் அருகே உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்துள்ளனர்.

இதில் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜோயல் (22) என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தந்தை கேரள மாநில காவல்துறையில் ஓர் உயர் பதவியில் அங்கம் வகுப்பதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி திருக்குறுங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு

Last Updated : Jul 24, 2022, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.