ETV Bharat / state

திமுக பேரூராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக திமுக உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு - Municipal Council Chairman

மணிமுத்தாறு திமுக பேரூராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையான முறையில் செயல்படுவதாக திமுக உறுப்பினர்கள் உட்பட 13 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திமுக பேரூராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக திமுக உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Aug 26, 2022, 9:39 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஒன்று. அதிக வருவாய் ஈட்டும் இந்த பேரூராட்சியில், மொத்தம் உள்ள 15 இடங்களில் 10 இடங்கள் திமுக, 2 அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சை ஆகியவை தலா ஒன்று என வெற்றி பெற்றதில், பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த அந்தோனியம்மாள் செயல்பட்டு வருகிறார்.

இவர் இதுவரை பேரூராட்சி மன்ற கூட்டத்தை நான்கு முறை நடத்தியுள்ளார். இதில் இரண்டு கூட்டங்களில் பேரூராட்சி மன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் உட்பட 13 கவுன்சிலர்கள் மக்களுக்கான எந்த அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை என கூட்டத்தை புறக்கணித்தனர்.

மணிமுத்தாறு பேரூராட்சி உறுப்பினர் சிவா செய்தியாளர் சந்திப்பு

இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என திமுக உட்பட ஒட்டுமொத்தமாக 13 உறுப்பினர்களும் ராஜினாமா செய்வோம் என அறிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

இதுவரை நிர்வாக ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர், மணிமுத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி மணிமுத்தாறு பேரூராட்சி மன்றத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் ஒட்டுமொத்தமாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இவ்வாறு அளிக்கப்பட்டுள்ள மனுவில், பொது மக்களுக்கு எந்த விதமான அடிப்படை பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் செய்ய முடியாத சூழல் இருந்து வருகிறது. தன்னிச்சையான முறையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முதலமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சர் மனோதங்கராஜின் சொந்தத்தொகுதியில் சீரமைக்கப்படாத சாலை... நோயாளிகளைத்தூக்கிசெல்லும் அவலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.